தொடரை சமப்படுத்தும் குறிக்கோளுடன் நியூஸிலாந்தை இலங்கை சந்திக்கவுள்ளது

Published By: Vishnu

08 Jan, 2025 | 12:29 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹெமில்டன் செடொன் பார்க் விளையாட்டரங்கில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இப் போட்டி இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் நியூஸிலாந்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வெலிங்டனில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றியீட்டிய நியூஸிலாந்து  இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற முயற்சிக்கவுள்ளது.

மறுபுறத்தில் முதலாவது போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி அடைந்த இலங்கை, இந்தப் போட்டியில் முழுத் திறமையுடன் விளையாடி வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த கங்கணம் பூண்டுள்ளது.

முதலாவது துடுப்பாட்டத்தில் கோட்டைவிட்ட இலங்கையின் முன்வரிசை வீரர்கள் இப் போட்டியில் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றி அடையச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பப் போட்டியில் மெட் ஹென்றியின் பந்துவீச்சில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்ததும் அவரைத் தொடர்ந்து மேலும் 3 விக்கெட்கள் குறைந்த ஓட்டங்களுக்கு சரிந்தன.

அவிஷ்க பெர்னாண்டோ திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதாலும் மத்திய வரிசையில் ஜனித் லியனகே, சமிது விக்ரமசிங்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் வழங்கிய அதிகபட்ச பங்களிப்புகளாலும் இலங்கை ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.

இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுப்பார் எனவும் குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடுவர் எனவும் கருதப்படுகிறது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஓரிரு மாற்றங்கள் இடம்பெறும் என களத்தடுப்புப் பயிற்றுநர் உப்புல் சந்தன தெரிவித்தார்.

ஆனால், எந்தெந்த வீரர்கள் நீக்கப்பட்டு யார், யார் அணியில் இணைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிடவில்லை.

பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர் ஏஷான் மாலிங்க நீக்கப்பட்டு துனித் வெல்லாலகே அணியில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. ஜெவ்றி வெண்டர்சேயும் அணியில் இணைக்கப்பட்டால் சமிது விக்ரமசிங்க அவருக்கு வழிவிட நேரிடும்.

இதேவேளை, நியூஸிலாந்து அணியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அணிகள்

இலங்கை அணி: பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, சமிது விக்ரமசிங்க அல்லது ஜெவ்றி வெண்டசே, வனிந்து ஹசரங்க, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார.

நியூஸிலாந்து அணி: வில் யங், ரச்சின் ரவிந்த்ரா, மார்க் செப்மன், டெரில் மிச்செல், க்ளென் பிலிப்ஸ், மிச்செல் ஹே, மிச்செல் சென்ட்னர் (தலைவர்), நேதன் ஸ்மித், மெட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில் ஓ'றூக்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06