மாதத்தின் அதி சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதுக்கு மூன்று வீராங்கனைகள் பரிந்துரை

Published By: Vishnu

07 Jan, 2025 | 07:57 PM
image

(நெவில் அன்தனி)

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அதி சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதுக்கு ஆடவர் பிரிவில் போன்றே மூன்று கண்டங்களைச் சேர்ந்த வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆடவருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்தவர்களே மகளிர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா, அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை அனாபெல் சதர்லண்ட், தென் ஆபிரிக்காவின் சுழல்பந்துவீச்சாளர் நொன்குலுலேக்கோ மலாபா ஆகியோரின் பெயர்களே டிசம்பர் மாத மகளிர் ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்ம்ரித்தி மந்தனா

அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் எதிராக கடந்த மாதம் அவுஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் நடைபெற்ற 6 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 270 ஓட்டங்களை ஸ்ம்ரித்தி மந்தனா பெற்றிருந்தார். அவரது துடுப்பாட்ட சராசரி 45.00 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 91.52 ஆகவும் இருந்தன.

பிறிஸ்பேனில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய மந்தனா, பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 105 ஓட்டங்களைக் குவித்து அசத்தியிருந்தார்.

தொடர்ந்து வரோதாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் முறையே 91 ஓட்டங்களையும் 53 ஓட்டங்களையும் மந்தனா பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் மந்தனா 3 அரைச் சதங்களைக் குவித்து அணியின் தொடர் (2-1) வெற்றியில் முக்கிய பங்காற்றி இருந்தார்.

அத் தொடரில் முறையே 54, 62, 77 ஓட்டங்களுடன் மொத்தமாக 193 ஓட்டங்களைப் பெற்றார். அவரது சராசரி 64.33ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 159.50ஆகவும் இருந்தன.

அனாபெல் சதர்லண்ட்

அவுஸ்திரேலியா கடந்த டிசம்பர் மாதம் விளையாடிய 5 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்வி அடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சகலதுறை வீராங்கனை அனாபெல் சதர்லண்ட் ஆவார்.

இந்தியாவுக்கு எதிராக பேர்த் அரங்கில் 110 ஓட்டங்களையும் நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் ஆட்டம் இழக்காமல் 105 ஓட்டங்களையும் பெற்றார்.

அவர் 5 போட்டிகளில் மொத்தமாக 269 ஓட்டங்களைக் குவித்ததுடன் ஒரு 4 விக்கெட் குவியலுடன் 9 விக்கெட்களையும் மொத்தமாக வீழ்த்தியிருந்தார்.

அவரது துடுப்பாட்ட சராசரி 67.25 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 113.98ஆகவும் இருந்தன.

பந்துவீச்சில் 16.22 என்ற சராசரியைக் கொண்டிருந்த அனாபெல் சதர்லண்ட், 3.85 என்ற எக்கொனொமிக் ரெட்டையும் கொண்டிருந்தார்.

நொன்குலுலேக்கோ மலாபா

புளூம்ஃபொன்டெய்னில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நொன்குலுலேக்கோ மலாபா அபரிமிதமாக பந்துவீச்சில் பிரகாசித்திருந்தார்.

அப் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்த போதிலும் மலாபா 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து அரிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

தென் ஆபிரிக்கா சார்பில் மகளிர் டெஸ்ட் போட்டி ஒன்றில் 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த முதலாவது தென் ஆபிரிக்க வீராங்கனை என்ற சாதனையையே அவர் நிலைநாட்டினார்.

அப் போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்களைக் கைப்பற்றிய மலாபாவின் சராசரி 15.70ஆக இருந்தது.

இதனைவிட 3 சர்வதேச ரி20 போட்டிகளில் 20 ஓட்டங்ளைப் பெற்ற அவர் 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04