மாதத்தின் அதி சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு பும்ரா உட்பட மூவர் பரிந்துரை

Published By: Vishnu

07 Jan, 2025 | 06:56 PM
image

(நெவில் அன்தனி)

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அதி சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு மூன்று கண்டங்களைச் சேர்ந்த மூன்று வேகப்பந்துவிச்சாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ், இந்தியாவின் உதவி அணித் தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ரா, தென் ஆபிரிக்காவின் டேன் பெட்டர்சன் ஆகிய மூவரின் பெயர்களே மாதத்தின் அதிசிற்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெட் கமின்ஸ்

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் பெட் கமின்ஸ் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த மாதம் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஐந்து விக்கட் குவியல் உட்பட 17 விக்கெட்களை பெட் கமின்ஸ் மொத்தமாக வீழ்த்தியிருந்தார். அவரது பந்துவீச்சு சராசரி 17.64 ஆகும். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற பந்துவீச்சுப் பெறுதி அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது.

துடுப்பாட்டத்தில் 144 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் மிகவும் இக்கட்டான நிலையில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 49 ஓட்டங்களையும் 41 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். அப் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி சகல துறைகளிலும் பிரகாசித்திருந்தார்.

ஜஸ்ப்ரிட் பும்ரா

நவம்பர் மாதம் முதல் டெஸ்டிலும் இந்த மாதம் கடைசி டெஸ்டிலும் இந்திய அணியின் பதில் தலைவராக ஜஸ்ப்ரிட் பும்ரா விளையாடி இருந்தார். ஆனால், இந்த 2 டெஸ்ட் போட்டிகளும் டிசம்பர் மாத விருக்கான காலத்தில் தொடர்பு படவில்லை.

டிசம்பர் மாதம் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் (2ஆம், 3ஆம், 4ஆம்) பும்ரா மொத்தமாக 22 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது பந்துவீச்சு சராசரி 14.22 ஆகும்.

பிறிஸ்பேன், மெல்பர்ன் ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்  இரண்டு   5 விக்கெட் குவியல்களுடன் தலா 9 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவின் உயிர்நாடியாக பும்ரா விளங்கினார்.

பிறிஸ்பேன் டெஸ்டில் 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி டிசம்பர் மாதத்தில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

மெல்பர்ன் டெஸ்டில் 2ஆவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட் குவியலை பும்ரா பதிவு செய்திருந்தார்.

அவரது அதிசிறந்த பந்துவீச்சுகளின் பலனாக டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியா சார்பாக அதிக புள்ளிகளைப் பெற்ற வீரர் என்ற சாதனையுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் 907 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

டேன் பெட்டர்சன்

டேன் பெட்டர்சனின் அசுர வேக, துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை முதல் தடவையாக தென் ஆபிரிக்கா உறுதி செய்துகொண்டது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு முன்னேறும் தென் ஆபிரிக்காவின் முயற்சியில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அவரது பந்துவீச்சுகள் முக்கிய பங்காற்றின.

அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டு 5 விக்கெட் குவியல்கள் உட்பட 13 விக்கெட்களை டேன் பெட்டர்சன் மொத்தமாக வீழ்த்தியிருந்தார். அவரது பந்துவீச்சு சராசரி 16.92ஆகும்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 71 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04