வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் ; வஜிர அபேவர்தன

08 Jan, 2025 | 12:58 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டமானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டியெழுப்பப்பட்ட தேசியக் கொள்கைத் திட்ட வரம்புக்குள் இருந்தே முன்வைக்கப்பட வேண்டும்.

அதற்கு அப்பால் சென்று வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலியில் உலுவிட்டிகேவிலுள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும். மூன்று மாத தாமதத்தின் பின்னரே அதனை முன்வைக்கப் போகின்றனர். 

இந்தத் தாமதத்தால் ஏற்படக் கூடிய நஷ்டத்தை தவிர்த்துக்கொள்வது இலகுவான வியடம் அல்ல. அத்துடன் அரசாங்கம் நினைத்தவாறு வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்தார். முக்கியமான 92 சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தே அவர் அதனை செய்தார். 

அந்த சட்டங்களுக்கு அமையவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதனை தவிர வேறு முறைகள் கிடையாது.

ஏதேனும் முறையில் இந்த சட்டங்களுக்கு புறம்பாக வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்த நாடாகும் என்பதனை உறுதியாக கூற முடியும்.

ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவே பார்க்கின்றோம். அதேபோன்று பொருளாதார மேம்பாட்டு சட்டம். 

இந்த சட்டத்தின் கீழே வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருக்கிறது. இலங்கை மத்திய வங்கி சட்டம், ஊழல் எதிர்ப்பு சட்டம். 

ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான காரியாலயம் விரைவாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. திருடர்கள் என தெரிவித்து போதாது.

 திருடர்களை சட்டத்தின் வரைபுக்குள் சிக்கவைத்துக்கொள்ள தேவையான பணிகுழு நியமிக்கப்பட்டு குறித்த காரியாலயம் பலப்படுத்தப்பட வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணையை டிசம்பர் மாதமளவில் பெற்றுக்கொண்டு நாட்டை முன்கொண்டு செல்லவே எதிர்பார்த்தார்.

ஆனால் இந்த அரசாங்கத்தின் தாமதத்தால் பொருளாதார நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் ரணில் விக்கிரமசிங்கவினால் தயாரிக்கப்பட்டள்ள தேசிய கொள்கைத் திட்ட வரம்புக்குள் இருந்தே வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க வேண்டி இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் அரசாங்கம் சிலவேளை இந்த முறைக்கு மாற்றமாக வரவு செலவு திட்டத்தை முன்வைக்க முயற்சித்தால் நாடு மீண்டும் வீழ்ச்சிக்கே செல்லும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது...

2026-03-12 16:27:47
news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் மின்சார சபை பொறியியலாளர்...

2026-03-12 16:23:50
news-image

இந்த ஆண்டு 'சிசு சரிய' சேவையில்...

2026-03-12 16:19:17
news-image

மட்டு. மண்முனை பாலத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-03-12 15:42:14
news-image

ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி செலுத்திய இளைஞர்...

2026-03-12 15:31:36
news-image

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர்...

2026-03-12 15:27:26
news-image

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி...

2026-03-12 15:27:01
news-image

யாழில் கார் - முச்சக்கரவண்டி மோதி...

2026-03-12 14:32:42
news-image

கண்டியில் பாடசாலை பணிப்பாளரின் வாகனம் மோதி...

2026-03-12 14:22:29
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-12 14:14:39
news-image

​ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் என்பது...

2026-03-12 14:00:02
news-image

மின்னல் குறித்து எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-03-12 13:57:58