ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் வீரர் லைனல் மெஸிக்கு வரி மோசடி வழக்கு தொடர்பில் 21 மாத சிறைத்தண்டனை விதித்து ஸ்பெயின் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைனல் மெஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸி ஆகிய இருவரும் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டுக்காக அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவருக்கும் தலா 21 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் மெஸ்ஸி குறித்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை செய்யுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்பெயின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மெஸிக்கு 21 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், அவரது தந்தைக்கான சிறைத்தண்டனையை 15 மாதங்களாக குறைத்துள்ளது.
இதேவேளை சிறைத்தண்டனையுடன் 14 கோடி ரூபா தண்டப்பணத்தையும், மேலும் வரிப்பணத்தையும் செலுத்துமாறும் மெஸிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2007 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் பெலிஸி மற்றும் உருகுவேயில் போலியான நிறுவனங்களைக் கொண்டு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமத்தினை வழங்கியதில் வரி மோசடி செய்ததாக மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM