இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 2

07 Jan, 2025 | 05:23 PM
image

எம்மில் சிலருக்கு திடீரென்று மயக்கம் ஏற்படும். அந்த மயக்கம் சில மணி தியாலங்கள் வரை கூட நீடிக்கும். இந்த தருணத்தில் அவர்களுக்கு வலிப்பு தாக்கங்கள் கூட ஏற்படக்கூடும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்.. அவர்களுக்கு இன்சுலினோமா எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்க இயலும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எம்முடைய உடலில் உள்ள கணையம் எனும் உறுப்பில் தான் இன்சுலின் சுரக்கிறது. இந்த இன்சுலின் உங்களின் ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. நீங்கள் பசியாறிய பிறகுதான் இன்சுலின் சுரக்கும். ஆனால் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கணையத்தில் கட்டி ஒன்று ஏற்படும். இந்த கட்டியை தான் மருத்துவ மொழியில் இன்சுலினோமா என குறிப்பிடுகிறார்கள். இந்த கட்டி ஒருவரின் கணையத்தில் இருந்தால் அவர்களுடைய உடலில் இயல்பான அளவைவிட அதீத அளவில் இன்சுலின் சுரக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட குறைந்துவிடும். இது மயக்கத்தை உண்டாக்கும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பு ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. மரபணு குறைபாடு காரணமாகவே இத்தகைய கட்டி பாதிப்பு ஏற்படுவதாகவும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

குழப்பம், வியர்வை, பலவீனம், சமச்சீரற்ற இதயத் துடிப்பு, ரத்த சர்க்கரையின் அளவு குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இத்தகைய பாதிப்பு உண்டாகும். மேலும் இத்தகைய இன்சுலினோமா அரிதானவை. பெரும்பாலும் இத்தகைய கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ட்ரான்ஸ் அப்போமினல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எண்டோஸ்கோபிக் அல்ட்ரா சவுண்ட்,  சிடி ஸ்கேன்,  எம் ஆர் ஐ ஸ்கேன் ஆகிய பரிசோதனையின் மூலம் இன்சுலினோமா  கட்டி பாதிப்பின் தன்மையையும், வீரியத்தையும் துல்லியமாக அவதானிக்கலாம். அதனைத் தொடர்ந்து லேப்ராஸ்கோபிக் சத்திர சிகிச்சை மூலம் அத்தகைய கட்டியை அகற்றி நிவாரணம் அளிக்கலாம். இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

வைத்தியர் பழனியப்பன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15