மலேசியா - பினாங்கு மாநிலத்தில் 11 - வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு

07 Jan, 2025 | 05:05 PM
image

மலேசியாவின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக 11-வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஜனவரி மாதம் கடந்த 4ஆம் மற்றும் 5ம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டில் பினாங்கு மாநில முதலமைச்சர் செள கோன் ய்யூ தொடங்கி வைத்து பினாங்கு மாநிலத்தில் தமிழர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அதற்கு சாட்சிகள் இங்கிருக்கும் கட்டிடங்களும் கோயில்களும் என்றும் இது போன்ற மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் சிறப்புரை ஆற்றினார். 

துணை முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜக்தீப் சிங் கலந்து கொண்டு இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இருக்கும் தொடர்பு இன்னும் அதிகரிக்கும் என்று உரையாற்றினார்.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர்  செல்வகுமார்  வரவேற்புரை ஆற்றினார் . உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் வந்திருக்கக்கூடிய தமிழர்களை இணைப்பது பொருளாதாரம், வர்த்தகத்தில் முன்னேற்றுவது பெண்களுக்கு தலைமைத்துவத்தில் சிறந்து விளங்க அவர்களுக்கு வழிகாட்டுவதே மாநாட்டின் குறிக்கோள் என்று அவர் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ  சுந்தர்ராஜீ சோமு மலேசியாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பையும் வர்த்தக தொடர்பையும் வரலாற்று ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி இந்த மாநாடு அடுத்த ஆண்டும் பினாங்கு மாநிலத்தில் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் மேலும் தமிழர்கள் மலேசியாவிற்கு வாழ வந்தவர்கள் அல்ல ஆள வந்தவர்கள் என்று சொன்னதும் மாநாட்டிற்கு வந்தவர்கள் தங்கள் கரங்களை தட்டி வரவேற்றனர். 

இந்த மாநாட்டில் ஆட்சி குழு உறுப்பினர் வாங் ஹான் வை பேசும்போது தமிழகத்திற்கும் பினாங்கிற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நேரடி விமான சேவை வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் என்றும் இன்னும் பல புதுமைகளுக்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என்றும் பேசினார்.

பினாங்கு மாநிலத்தின் மேயர் டத்தோ ஸ்ரீ  ராஜேந்திரன்  தமிழ் வம்சாவளி அமைப்பை வாழ்த்தி தான் தமிழ் வம்சாவளி என்றும் கொஞ்சும் தமிழில் பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார். 

மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில் துறை அமைச்சர்  ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் கிராம தொழில் சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்கையும் அதில் தமிழக கிராமத்தில் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு இருக்கிறது வாங்கி பயனடையுங்கள் என்று சொன்னார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்  தான் பேசுகின்ற போது உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னும் சிறந்து வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

கட்சி தலைவர் .ஈஸ்வரன் தான் ஒரு பொறியியல் பட்டதாரி என்றும் உலகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் முக்கியமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ் கனி  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வி ஐ டி பல்கலைக்கழகத்தினுடைய வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பினாங்கிறுக்கு வந்திருப்பதாகவும் அசுர வளர்ச்சியை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இரண்டாம் நாள் வர்த்தக நிகழ்வில் நூற்றாண்டு பழமை மிக்க மலேசிய பினாங்கு வர்த்தக சங்கத்தின் தலைவர்டத்தோஸ்ரீ பார்த்திபன் தலைமை உரை ஆற்றினார். மலேசிய இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் நாராயண சாமி  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வி ஐ டி பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் அவர்கள் பேசுகின்ற போது ரத்தன் டாடா அவர்களின் மகத்தான சேவைகளை நினைவு கூற வேண்டும் என்று பேசினார்.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் இரண்டாவது நாள் மலேசிய வர்த்தக சங்கமும் இந்திய வர்த்தக சங்கமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டார்கள்.

 இது தொழில் மிகப் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த ஒப்பந்தத்தை மலேசியா வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு பார்த்திபன் அவர்களும் திரு செல்வகுமார் அவர்களும் கையொப்பம் இடும்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் ஸ்ரீ சுந்தரராஜு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டது.

உணவு இடைவேளைக்கு பிறகு சென்னையில் இருந்து வந்திருந்த தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனங்களை பற்றிய காணொளியை ஒளிபரப்பி விளக்கினார்கள். 

பிற்பகல் 3 மணிக்கு மேல் நடைபெற்ற மகளிர் தலைமைத்துவம் மாநாட்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியம்  மற்றும் மலேசிய வர்த்தக மகளிர் பிரிவு தலைவி ஹேமலா சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் சுஜிதா மற்றும் விழாவில்  தமிழகத்தின் ஐஏஎஸ் அதிகாரியான  மகேஸ்வரி ஐஏஎஸ் கலந்துகொண்டு பெண்கள் தலைமைத்துவத்தை அடைந்தாலும் குடும்பம் ஒழுக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருவது குறித்து சிறப்புரை சிறப்புரை ஆற்றினார். 

முன்னாள் பிரதமத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தேவமணி மகளிர் மேம்பாட்டு தலைமைத்துவ மாநாட்டை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு நன்றியுரை கவிஞர் ரவி பாரதி வழங்கினார் மேலும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ஜான் தன்ராஜ்  தொகுத்து வழங்கினார். 

இம்மாநாட்டில் வர்த்தக கண்காட்சியை  அநேகர் பார்த்து மகிழ்ந்தனர் மேலும் இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா நாங்கள் நாட்களில் மறக்க முடியாத நிகழ்வு என்று பினாங்கு வா தமிழர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17