தமிழின் நட்சத்திர நடிகரான விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மத கஜ ராஜா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி இயக்கத்தில் உருவான 'மத கஜ ராஜா' எனும் திரைப்படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், சோனு சூட் ,நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், ராஜேந்திரன், அஜய் ரத்தினம், சுதா, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் மறைந்த தமிழ் திரை நட்சத்திரங்களான மணிவண்ணன் ,மனோபாலா, மயில்சாமி ,சிட்டிபாபு ,சீனு மோகன், ஆகியோர்களும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக தயாரானது. ஆனால் பல்வேறு நிதி சிக்கல் காரணமாக இந்த திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து திரையுலக வணிகர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு இந்த திரைப்படம் எதிர்வரும் 12,ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தற்போதைய இளம் தலைமுறை சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விடயங்கள் இருப்பதால் வரவேற்பு பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM