ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் புதிய கல்வி ஆண்டு தொடங்கும். இம்மாத இறுதியில் புதிய வகுப்பில் இணையும் மாணவர்களும், மாணவிகளும் தொடக்கத்தில் கல்வி மீதும் கற்றல் மீதும் மிகுந்த பற்றும், ஆர்வமும் இருக்கும். ஆனால் தேர்வு என்று வரும்போது அதில் அதிக பெருபேறுகளைப் பெற்று சித்தி அடையும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை என்பது குறைவாகத்தான் இருக்கும். இதனால் ஒருபுறம் குறைவான பெருபேறுகளை பெற்ற மாணவர்கள் துயரமடைவார்கள்.
மறுபுறம் அவர்களின் பெற்றோர்களும் எம்முடைய பிள்ளைகள் கல்வியில் புலமை பரிசில் பெற்று சித்தி அடையவில்லையே..! என்ற எண்ணமும் ஏற்படும். அத்துடன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலையும் கொள்வார்கள். இந்தத் தருணத்தில் எம்முடைய பிள்ளைகள் கல்வி கற்பதில் தேர்ச்சி பெற்று, உயர்கல்வியை பெற வேண்டும் என பெற்றோர்களும் மாணவர்களும் விரும்பினால் அவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு அற்புதமான குறிப்பினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
அதாவது கல்விக்கு புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். எம்மில் சிலர் வகுப்பறையில் இருந்தாலும் ஆசிரியர்கள் கற்பித்தாலும் அவர்களின் சிந்தனை ஒருமுகத்துடன் இல்லாமல் கவனச்சிதறலுடன் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இவர்கள் பெரும்பாலும் கேது பகவானின் ஆதிக்கத்தில் அதாவது கேது திசையில் கேது புத்தியில் கேது அந்தரத்தில் இருக்கக்கூடும். இத்தகைய மாணவர்கள் எந்தவித குறிக்கோளும் வைத்துக் கொள்ளாமல் எந்தவித லட்சியத்தையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளாமல் கடமைக்காக பாடசாலைக்கு வருகை தந்து கொண்டிருப்பார்கள்.
இவர்களின் கவனச்சிதறலை மாற்றி அமைத்து, மனதிற்குள் லட்சியத்தை உருவாக்க வேண்டும் என்றால் இவர்கள் வீட்டில் இருக்கும்போது அல்லது புத்தகத்தை வாசிக்கும் போது அவர்கள் கண்ணில் படும் படியாக ஆந்தையின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அத்துடன் புதன் பகவானின் எண்ணியல் அடையாளத்தையும் அவர்கள் கண்ணில் படும்படி வைக்க வேண்டும். புதன் பகவானின் புகைப்படத்தையும் வைக்கலாம். புதன் கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வணங்கி அங்கு தரும் துளசி தீர்த்தத்தையும் அருந்தலாம்.
ஆந்தை புகைப்படத்தை நாளாந்தம் மாணவர்களும் மாணவிகளும் பார்வையிடும் போது அவர்களின் மனதிற்குள் மாற்றம் ஏற்படும். அவர்களை சூழ்ந்திருக்கும் மாயத் தடைகள் அகலும். அவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தினை ஒருமுகத்துடன் கவனித்து கற்றுக் கொள்வார்கள். இவர்களால் தான் தேர்வுகளில் அதிக பெருபேறுகளை பெற்று சித்தியடைய முடியும். இதனால் மாணவர்கள்' ஓ' லெவல் ,'ஏ 'லெவல் ஆகியவற்றில் சித்தி அடைந்து உயர்கல்வியை கற்க வேண்டும் என்றால் இந்த ஆந்தையின் புகைப்படத்தை ஒரு எளிய வலிமை வாய்ந்த குறிப்பாக பாவிக்கலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM