செனல் - 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் முறையான விசாரணை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Published By: L. Abhilashani

07 Jan, 2025 | 03:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 

உயிர்த்த ஞாயிறு  குண்டுத்தாக்குதல் தொடர்பாக  முன்னெடுக்கப்பட்டுள்ள   விசாரணைகளுக்கு மேலதிகமாக செனல் 4 தொலைக்காட்சியில்  வெளியான  ஆவணப்படத்தையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07)  நடைபெற்ற  அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு  குண்டுத் தாக்குதல்கள்  தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய சந்தேக நபர்கள் 747 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களில் நூறு பேருக்கு மேல் நீதிமன்றத்தில் 41 வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,  14 குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்தில் வெளியான தகவல்கள் அதற்கு புறம்பாக மேலதிக விசாரணைகளில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இது தொடர்பான விசாரணைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளில் கடந்த நவம்பர் 11ஆம் கோட்டை நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

48 சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17
news-image

சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட...

2026-09-12 14:48:21
news-image

அரசாங்கத்தின் செயல்கள் ,வாக்குறுதிகள் நிறைவேற்றாமையை கண்டித்து...

2026-09-12 14:50:18