அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ' குட் பேட் அக்லி ' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், திரிஷா, பிரபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ் ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எக்சன் கொமடி ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சிரீஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தருணத்தில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இதனிடையே அஜித்குமார் நடிப்பில் தயாராகி இம்மாதம் பத்தாம் திகதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 'விடா முயற்சி ' எனும் திரைப்படம் ரீமேக் உரிமை , தயாரிப்பு நிறுவனத்தின் கடன் சுமை , இந்தியன் 3 பட வெளியீட்டு விவகாரம் , என பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் இந்த படக் குழுவினர் கோடை விடுமுறையை குறி வைத்து விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களுக்காக காத்திருந்த 'குட் பேட் அக்லி' படக்குழுவினர் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவும், குட் பேட் அக்லி படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM