தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஜீவா, அர்ஜுன் முதன் முறையாக இணைந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'அகத்தியா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காற்றின் விரல்..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும், ஆங்கில மொழியிலான பாடல் வரிகளுடன் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ' அகத்தியா ' எனும் திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா, ராதாரவி, யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட் சொனன்பிளாக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாம் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.
இந்த தருணத்தில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'காற்றின் விரல் பிடித்து நடந்து வா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். பாடலுக்கான காட்சிகள் , பாடல் வரிகள், யுவனின் வசீகரிக்கும் குரல் , கதாபாத்திரங்களின் வண்ணமயமான கற்பனை திறனுடன் கூடிய பின்னணி , நடன அசைவு , ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM