மாத்தறை, வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினால் நேற்று திங்கட்கிழமை (06) இரவு வெலிகம பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதுடைய வள்ளிவல, வெலிகம பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்த கைதியின் சடலம் துர்க்கி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்ததோடு, இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பிச்சென்ற குழுவினரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத குழுவினர் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற ஐவரில் இருவர் காயமடைந்து பின்னர் இருவரும் மாத்தறை வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்தவர் கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் காயமடைந்த இளைஞன் 29 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவு, வெலிகம மற்றும் மாத்தறை பொலிஸ் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM