பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்டில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா தொடரை முழுமையாகக் கைப்பற்றியது

06 Jan, 2025 | 10:38 PM
image

(நெவில் அன்தனி)

கேப் டவுடன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலோ ஒன்னில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

போட்டியில் ஒரு நாள் மீதம் இருக்க இப் போட்டியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த வெற்றியுடன் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சிக்கான அணிகள் நிலையில் 69.44 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தை தென் ஆபிரிக்கா நிரந்தரமாக்கிக்கொண்டது.

58 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நான்காம் நாளான இன்று திங்கட்கிழமை மாலை இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 425 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த பாகிஸ்தான் பலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டது.

போட்டியின் 3ஆம் நாளான நேற்றைய தினம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 478 ஓட்டங்களைப் பெற்றது.

இன்று காலை தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஷான் மசூத் 145 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசையில் மொஹமத் ரிஸ்வான், சல்மான் அகா, ஆமிர் ஜமால் ஆகிய மூவரும் 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதுடன் மேலும் இருவர் 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

மொஹம்மத் ரிஸ்வான், சல்மான் அகா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறு சோதனையைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்கா இன்றைய தினத்திற்குள் வெற்றிபெற்றுவிடும் என்பது உறுதியானது.

முதல் நாளன்று உபாதைக்குள்ளான சய்ம் அயூப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பெடுத்தாடவில்லை.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

தென் ஆபிரிக்கா சார்பாக முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த ரெயான் ரிக்ல்டன் 3ஆவது நாளன்று உபாதைக்குள்ளானதால் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் பெடிங்ஹாம் ஆரம்ப வீரராக ஏய்டன் மார்க்ராமுடன் துடுப்பெடுத்தாடினார்.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 615 (ரெயான் ரிக்ல்டன் 259, டெம்பா பவுமா 106, கய்ல் வெரிசன் 100, மார்க்கோ ஜென்சன் 62, கேஷவ் மஹராஜ் 40, மொஹம்மத் அபாஸ் 94 - 3 விக்., சல்மான் அகா 148 - 3 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 194 (பாபர் அஸாம் 58, மொஹம்மத் ரிஸ்வான் 46, கெகிசோ ரபாடா 55 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 14 - 2 விக்., க்வேனா மஃபாக்கா 43 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: (ஃபலோ ஆன்) சகலரும் ஆட்டம் இழந்து 478 (ஷான் மசூத் 145, பாபர் அஸாம் 81, சல்மான் அகா 48, மொஹம்மத் ரிஸ்வான் 41, ஆமிர் ஜமால் 31, கம்ரன் குலாம் 28, சவூத் ஷக்கீல் 23, கெகிசோ ரபாடா 118 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 137 - 3 விக்., மார்க்கோ ஜென்சன் 101 - 2 விக்.)

தென் ஆபிரிக்கா - வெற்றி இலக்கு 58 ஓட்டங்கள் - 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 61 (டேவிட் பெடிங்ஹாம் 47 ஆ.இ., ஏய்டன் மார்க்ராம் 14 ஆ.இ.)

ஆட்டநாயகன்: ரெயான் ரிக்ல்டன். தொடர்நாயகன்: மார்க்கோ ஜென்சன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06