(நெவில் அன்தனி)
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட மஞ்சி தேசிய சுப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டியில் ஆடவர் பிரிவில் இலங்கை துறைமுக அதிகார சபை அணியும் மகளிர் பிரிவில் இலங்கை விமானப்படை அணியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன.
வெண்ணப்புவை சேர் அல்பர்ட் பீரிஸ் உள்ளக அரங்கில் இறுதிப் போட்டிகள் கடந்த வார இறுதியில் நடத்தப்பட்டது.
ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இலங்கை மின்சார சபை அணியும் இலங்கை துறைமுக அதிகார சபை அணியும் மோதின.
அப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை துறைமுக அதிகார சபை அணி 3 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியனானது.
முதலாவது செட்டில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இலங்கை துறைமுக அதிகார சபை 25 - 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றது.
அடுத்த செட்டில் துறைமுக அதிகார சபை அணியிடம் சிறு சவாலை எதிர்கொண்டபோதிலும் 25 - 22 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை துறைமுக அதிகார சபை வெற்றிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 3ஆவது செட்டில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன. இறதியில் 25 - 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை துறைமுக அதிகார சபை வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடியது.
ஆடவர் பிரிவில் பெறுமதி வாய்ந்த வீரர் விருதை இலங்கை துறைமுக அதிகார சபையின் லசிந்து மெத்மல் வசன்தப்ரிய வென்றெடுத்தார்.
மகளிர் பிரிவில் விமானப்படை
சம்பியன் பட்டத்தை சூடியது
இலங்கை விமானப்படை அணிக்கும் இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கும் இடையில் நான்கு செட்கள்வரை நீடித்த மகளிர் இறுதிப் போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற விமானப்படை சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
முதலாவது செட்டில் மிகச் சிறந்த நுட்பத்திறனுடன் விளையாடிய விமானப்படை 24 - 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது செட்டில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்ற விமானப்படை 25 - 20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது செட்டில் விமானப்படைக்கு சவால் விடுத்து விளையாடிய இலங்கை துறைமுக அதிகார சபை 25 - 14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.
ஆனால் நான்காவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய விமானப்படை 25 - 18 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
மகளிர் பிரிவில் பெறுமதிவாய்ந்த வீராங்கனை விருதை இலங்கை விமானப்படையின் சத்துரிக்கா கயனி ரணசிங்க வென்றெடுத்தார்.
ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சிறந்த செட்டர், லிபெரோ உட்பட ஒவ்வொரு நிலைகளுக்குமான சிறந்த வீர, வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த இரண்டு பிரிவுகளிலும் இராணுவ அணிகள் மூன்றாம் இடத்தைப் பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM