ரஷ்ய படையில் இலங்கையர்கள் வலிந்து இணைப்பு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் விரைவில் பேச்சு - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

06 Jan, 2025 | 06:56 PM
image

ஆர்.ராம்

ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக  வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த முகவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முன்னாலுள்ள சுற்றுவட்டத்தில் ரஷ்யப்படையில் தமது உறவுகள் வலிந்து இணைக்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்து நான்கு தாய்மார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இன்று (6) நண்பகலளவில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47