படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Published By: Digital Desk 7

06 Jan, 2025 | 06:57 PM
image

மன்னார் - வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை (6)  காலை வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மன்னார் மறைமாவட்ட  ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை  தலைமையில் குருக்கள் இணைந்து  இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு  மாலை அனுவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குருக்கள் மற்றும் கிராம மக்கள் சுடர் ஏற்றி மலர் துர்வி படு கொலை செய்யப்பட்ட அருட்தந்தை மற்றும் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும்,உயிரிழந்த மக்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்யவும், பல்வேறு மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும், அவருடன் பொது மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.  திருப்பலியின் போது அருட்தந்தையுடன் சேர்ந்து இன்னுயிர் நீத்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப் பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்ந்து உயிர் நீத்தவர்களின் 40 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17