நவீன உட்கட்டமைப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச தரம்வாய்ந்த காலிங்கா விளையாட்டரங்கு

06 Jan, 2025 | 06:01 PM
image

சரண்யா பிரதாப்

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் புபணேஸ்வர் நகரில் அமைந்துள்ள காலிங்கா விளையாட்டரங்கு (Kalinga Stadium) பிரபலமான விளையாட்டரங்காகும்.

இது பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்றது. காலிங்கா விளையாட்டரங்கு தனது நவீன வசதிகள், தரமான கட்டமைப்பு மற்றும் பரந்த அளவிலான விளையாட்டு நடவடிக்கைகளுக்காக சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

1978 இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கு பல ஆண்டுகளாக பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய நவீன விளையாட்டு வளாகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டரங்குகளில் ஒன்றாக திகழும் காலிங்கா விளையாட்டரங்கில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஹொக்கி, கால்பந்து, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளம், துப்பாக்கி சுடுதல் மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளை நடத்த உயர் செயல்திறன் கொண்ட வசதிகளை காலிங்கா விளையாட்டரங்கு தன்னகத்தே கொண்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் பயிற்சியாளர்களிடமிருந்து சிறந்த பயிற்சிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தளமாகவும் இந்த விசேட வசதிகள் உள்ளமை சிறப்பம்சமாகும்.

உலகம் தரம்வாய்ந்த பிளாஸ்டிக் ஆடுகளமாக (Plastic Turf) ஹொக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தரத்திற்கு இணையான பிளாஸ்டிக் ஆடுகளத்தைக் கொண்ட மைதானம் இதுவாகும்.

இதில் இரண்டு ஹொக்கி உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஆண்களுக்கான சர்வதேச ஹொக்கி சம்மேளன (FIH) ஹொக்கி உலகக் கிண்ண போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

தடகள விளையாட்டுகளுக்காக 8 ஓடுபாதைகளுடன் (Lane) சிந்தட்டிக் செயற்கை விரிப்பைக் கொண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன.

அத்தோடு, உயர்தர வசதிகளைக் கொண்ட விளையாட்டுத்துறை ஆற்றல் வெளியப்பாட்டு நிலையம் இங்கு அமையப் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்திய விளையாட்டுத்துறையில் ஒரு முக்கிய அடையாளமாக காலிங்கா விளையாட்டரங்கு திகழ்கிறது. இந்த விளையாட்டுத்துறை உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தை அபினவ் பிந்த்ரா இலக்கு செயல்திறன் (ABTP) நிலையம் நிர்வகிக்கின்றது.

காலிங்கா விளையாட்டரங்கு இந்தியாவிலேயே முதலாவதும் தெற்காசியாவிலேயே மிகப்பெரியதுமான உள்ளக தடகள அரங்கை கொண்டுள்ளது. இது இரண்டாயிரம் பேர் அமரும் வசதிகளை கொண்டது. இந்த உள்ளக அரங்கில் 200 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான தடகளம் அமைந்துள்ளது. கோலூன்றிப் பாய்தல், குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளுக்கென 80 மீற்றர் மற்றும் 20 மீற்றரைக் கொண்ட ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.

எடைப் பயிற்சி நிலையம், வீரர்களுக்கான தங்குமிடம், 60 இரட்டைப் பகிர்வு அறைகள் மற்றும் ஓய்வறைகள் ஆகியவற்றையும் இந்த அரங்கம் கொண்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள வெளியரங்கம் (Outdoor Stadium) சுமார் 15,000 பேர் அமரக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.

50 மீற்றர் நீளம் கொண்ட நீச்சல் தடாகமும் சுழியோட்டத்திற்கான (Diving) மிகவும் ஆழமான தடாகமும் அமையப் பெற்றுள்ளது. இதன் மூலம் நீச்சல் மற்றும் சுழியோட்டப் போட்டிகள் இடம்பெறக் கூடிய வசதியை கலிங்கா தடாகம் கொண்டுள்ளது.

காலிங்கா விளையாட்டரங்கமானது ஒடிசா மாநிலத்தின் விளையாட்டு மற்றும் கலாச்சார அடையாளமாக விளங்குகிறது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளின் வழியாக புபணேஸ்வர் நகரின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

உயர்ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தின் அதி நவீன உட்கட்டமைப்பு வசதிகள்

இந்தியாவின் மிகப்பெரிய டிரெட்மில் (India’s largest treadmill)

வேலியண்ட் அல்ட்ரா 450 டிரெட்மில் என்பது நடை மற்றும் ஓடு பயிற்சி உபகரணமாகும், இது பரா - தடகள வீரர்களின் பயிற்சி மற்றும் மறுவாழ்வு உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 450 x 300 சென்றி மீற்றர் (சுமார் 15x10 அடி) நடைபயிற்சி மேற்பரப்புடன், இந்தியாவின் மிகப்பெரிய டிரெட்மில்லாகவும் கருதப்படுகிறது.

கடல்மட்டத்தில் இருந்து உயரமான இடங்களுக்கு ஏற்புடைய பயிற்சி அறை (Altitude training chamber)

கடல்மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான இடங்களில் விளையாட்டுகளில் பரந்த அளவிலான பயன்பாடுகக்கு தேவையான கருவிகளுடன் பயிற்சி அறை வசதி இங்கு இருக்கின்றது. இது உலகளவில் இராணுவக் குழுக்களுக்கு உயரமான சூழலில் உயிர்வாழ்வதற்கான செயல்திறன் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

இது உயரமான இடங்களில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்களுக்கு பயணிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு காலநிலை மற்றும் ஒட்சிசன் அளவை உருவகப்படுத்துவதன் மூலம் உயரமான இடங்களில் நோயின் அறிகுறிகளைக் குறைக்கவும் தயார் நிலையை அதிகரிக்கவும் உதவுகிறது.

ட்ரீம்போட் (Dream pods)

ட்ரீம்போட் மிதக்கும் தொட்டி சிகிச்சை என்பது நீரில் எப்சம் உப்பு கலந்த மிதக்கும் தொட்டியில் படுத்திருக்கும் செயன்முறையாகும். இப்படி உப்பு நீரில் படுக்கும்போது, லாக்டிக் அமிலத்தை விரைவாக வெளியிட உடலுக்கு உதவுவதால், மூட்டு இணைப்பு தசைகளில் உள்ள புண் மற்றும் சோர்வை நீக்குகிறது. இது வலி நிவாரணத்திற்கும் உதவுகிறது. இது பொதுவாக மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

கிரையோ சேம்பர் (Cryo Chamber)

கிரையோ தெரப்பி அறை என்பது விளையாட்டுகளில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஒரு அதிநவீன சிகிச்சை கருவியாகும். விளையாட்டின்போது ஏற்படும் காயங்கள் மற்றும் சோர்வுக்கு சிகிச்சையளிக்க இந்த செயல்முறை உதவுகிறது. கிரையோதெரப்பி விளையாட்டு வீரர்களுக்கு மனதையும் உடலையும் சமநிலைப்படுத்துவதன் மூலம் உகந்த செயல்திறனை அடைய உதவுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-08 20:54:43
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36