இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க காலை அல்லது மாலை ஏதேனும் ஒரு தருணத்தில் அருகில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சியினை மேற்கொள்கிறார்கள். இதன் மூலம் தங்களுடைய உடலை ஆரோக்கியமானதாகவும், பொலிவான தோற்றத்துடனும் மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். இந்தத் தருணத்தில் சிலருக்கு எதிர்பாராத வகையில் திடீரென்று மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதுண்டு. இந்நிலையில் வைத்தியர்கள் கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள். இந்த பரிசோதனை ஏன் என்பது குறித்தும் வைத்தியர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் தருணங்களில் உங்களால் எத்தனை மணித்தியாலம் வரை உற்சாகத்துடன் உடற்பயிற்சியில் ஈடுபட இயலும் என்பதையும், அதற்கு உடலின் ஒத்துழைப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் அளவிடுவதற்கான பரிசோதனை தான் கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை. உடற்பயிற்சியின் போது உங்களின் ஓக்சிஜன் அளவு குறித்தும், நீங்கள் வெளியிடும் கார்பன் டை ஒக்சைடு அளவு குறித்தும், உங்களுடைய சுவாச திறன் குறித்தும், குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரலின் இயங்கு திறன் குறித்தும் துல்லியமான அளவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் இத்தகைய பரிசோதனை மூலம் கிடைக்கும் மதிப்பீடுகளை வைத்து உடற்பயிற்சி செய்ய வேண்டிய நிமிடங்களை வரையறுக்கலாம். இதன் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். குறிப்பாக உடற்பயிற்சியின் போது இதயம், சுவாச அமைப்பு, நுரையீரல் ஆகியவற்றின் இயங்கு திறன் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை அவதானிக்கவும் இத்தகைய பரிசோதனை அவசியமாகிறது.
உடற்பயிற்சியை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளலாம் என என்றும் வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதே தருணத்தில் அதிக உடல் எடை மற்றும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உடலின் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது இத்தகைய பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்த பரிசோதனையின் போது உங்களுடைய மூக்குப்பகுதியில் பிரத்யேக கருவி பொருத்தப்படும். அந்தக் கருவி அருகில் இருக்கும் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ட்ரெட்மில்லில் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த உடற்பயிற்சி சோதனை ஒவ்வொருவருக்கும் அவர்களின் வயது, ஆரோக்கியம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை இந்த பரிசோதனை நடைபெறக்கூடும். இதன் போது கிடைக்கும் மதிப்பீடுகளை வைத்து உங்களின் இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயங்கு திறன்கள் துல்லியமாக அவதானிக்கப்படும். இத்தகைய பரிசோதனையை மேற்கொண்டு, நீங்கள் உடற்பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யும் நேரத்தை கணக்கிட முடியும். இதனூடாக உங்களின் ஆரோக்கியமும், வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
- வைத்தியர் திலீப் குமார்
தொகுப்பு : அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM