எம்மில் பலரும் ஏதேனும் ஒரே கிழமையில் பிறந்தாலும் அவர்களின் ஜாதக கட்டம் வெவ்வேறானதாக இருக்கும். சிலரது ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்குரிய நட்சத்திரத்தில் பிரத்யேகமான மூன்று நட்சத்திரத்தில் நவ கிரகங்களும் இடம்பெறுவதில்லை. உதாரணத்துக்கு சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம், சுக்கிர பகவானின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் உங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகங்களும் இல்லை என்றால் சூரியனும் சுக்கிரனும் ஆகமி கிரகங்களாக கருதப்படுவார்கள்.
ஒரு தம்பதிகளின் ஜாதகத்தில் புத்திரகாரகனான குரு பகவானின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் எந்த கிரகமும் இல்லை என்றால் அவர்களுக்கும் புத்திர பாக்கியம் தாமதமாகும் அல்லது புத்திர பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். இவர்கள் ஐ.வி.எஃப் எனப்படும் செயன்முறை கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தாலும் அதிலும் தோல்வியே கிடைக்கும்.
இந்நிலையில், எம்மில் பலரது ஜாதகத்திலும் ஏதேனும் கிரகத்துக்குரிய நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இடம்பெறாமல் இருக்கும். இப்படி ஒரு கிரகத்துக்குரிய மூன்று நட்சத்திரங்களில் எந்த கிரகமும் இல்லை என்றால் அந்த கிரகம் ஆகமி கிரகம் என சோதிட நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த ஆகமி கிரகங்கள் உங்களுடைய இந்தப் பிறவியில் கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதப்படுத்தும் அல்லது கிடைக்காமல் இருக்கச் செய்யும் ஆற்றல் படைத்தவை. இதனை துல்லியமாக சோதிட நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் அவதானித்து, அதற்குரிய இறை வழிபாட்டு அல்லது ஆலய வழிபாட்டு பரிகாரத்தையும், வாழ்வியல் பரிகாரத்தையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது அந்த கிரகம் உங்களுக்கு இந்த பிறவியில் கிடைக்கவேண்டிய அனைத்து சுப பலன்களையும் வழங்கும்.
உதாரணத்துக்கு ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவானின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் நவகிரகங்களில் எந்த கிரகமும் இடம்பிடிக்கவில்லை என்றால் அந்த ஜாதகருக்கு கல்வி பயில்வதில் தடை உண்டாகும். இவர் உயர்கல்வி கற்பதற்கு பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதனை துல்லியமாக அவதானித்து புதன் பகவானுக்குரிய ஆலய வழிபாட்டையும் வாழ்வியல் பரிகாரத்தையும் மேற்கொள்ளும்போது புதன் பகவான் மனம் குளிர்ந்து அருள் புரிவார். அதன் பிறகு உங்களுக்கு உயர்கல்வியில் எந்தத் தடையும் இல்லாமல் கற்று, சித்தி அடைவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM