சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா', அஜித் குமார் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம் ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தன்னுடைய பால்ய காலத்து நண்பரும், நீண்ட நாள் காதலருமான நவ்நீத்தை பெற்றோர்களின் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தம்பதிகள் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய சாக்ஷி அகர்வால், '' நான் கலை உலகில் நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவிற்கு ஆதரவு அளித்தவர் நவ்நீத். அதன் பிறகு தான் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
நட்பாக தொடங்கிய எங்களின் பயணம் காதலாகி, தற்போது திருமண பந்தத்தில் இணைந்து இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதற்கான ஆதரவை அவர் வழங்கியிருக்கிறார்.
அதனால் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன் தற்போது பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். தற்போது மலையாளம்- கன்னடம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படங்களில் நடித்திருக்கிறேன்.
இந்தப் படங்கள் விரைவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படங்களின் பணிகளும் வெவ்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகிறது. என் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இந்த தருணத்தில் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM