சுந்தர்.சி நடிக்கும் 'வல்லான்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

06 Jan, 2025 | 03:13 PM
image

இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வல்லான்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண் ஜாடை பூவா..' எனும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வி.ஆர். மணி சேயோன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வல்லான்' எனும் திரைப்படத்தில் சுந்தர்.சி, தான்யா ஹோப், ஹிபாப் பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை வி.ஆர். டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் வி.ஆர். மணிகண்ட ராமன் மற்றும் வி. காயத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இம்மாதம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் நடைபெற்ற 'கண் ஜாடை பூவா..'  எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  

இந்தப் பாடலை பாடலாசிரியை உமாதேவி எழுத பின்னணி பாடகர் கார்த்திக் மற்றும் பின்னணி பாடகி ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

 சந்தோஷ் தயாநிதியின் வசீகரிக்கும் மெல்லிசை மெட்டில் காதலை வெளிப்படுத்தும் வரிகளுடன் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் இளைய தலைமுறை ரசிகர்களை கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right