வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை அரினா சபலென்கா சுவீகரித்தார்

06 Jan, 2025 | 01:41 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சம்பியன் பட்டத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிறிஸ்பேனில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகி இருந்தார்.

இந்த வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த சபலென்கா, அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வருடத்தின் முதலாவது மாபெரும் டென்னிஸ் போட்டியான அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் பட்டத்திற்கு குறிவைத்து விளையாடவுள்ளார்.

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷ்ய வீராங்கனை போலினா குடேமெட்டோவா ஆகிய இருவரும் நடுநிலையாளர்களாக பங்குபற்றினர்.

மூன்று செட்கள் நீடித்த இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் போலினா குடேமெட்டோவா வெற்றிபெற்றார்.

அடுத்த செட்டில் பதிலடி கொடுத்த அரினா சபலென்கா 6 - 3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று செட்கள் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்மானம் மிக்க மூன்றாவது செட்டில் மிகத் திறமையாக விளையாடிய சபலென்கா 6 - 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றிபெற்று சம்பியனானார்.

சபலென்கா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்றெடுத்த 18ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் செக் வீரர் லெஹெக்கா சம்பியன்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் செக் வீரர் ஜிரி லெஹெக்கா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

ஆடவர் டென்னிஸில் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்சை கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த ரெய்லி ஒபெல்கா, இறுதிப் போட்டியில் உபாதைக்குள்ளாகி ஒய்வு பெற்றதால் முதல் செட் நிறைவடைவதற்கு முன்னரே ஜிரி லெஹெக்கா சம்பியனாகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.

அப் போட்டியின் முதல் செட்டில் 4 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஜிரி லெஹெக்கா முன்னிலையில் இருந்தார். அப்போது ரெய்லி ஒபெல்காவின் மணிக்கட்டில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இதனை அடுத்து ஜிரி லெஹெக்காவுக்கு வோக்ஓவர் (walkover)முறையில் வெற்றியை அளித்த மத்தியஸ்தர் அவரை சம்பியனாகப் பிரகடனப்படுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04