(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுடன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 194 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான், பலோ ஒன்னில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு பாகிஸ்தான் மேலும் 208 ஓட்டங்களைப் பெறவேண்டும்.
போட்டியில் மேலும் இரண்டு தினங்கள் இருப்பதால் பாகிஸ்தான் தோல்வியைத் தவிர்க்கும் என எதிர்பார்க்க முடியாது.
வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 615 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 3ஆம் நாளான இன்று அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பாபர் அஸாம் 56 ஓட்டங்களையும் மொஹம்மத் ரிஸ்வான் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கேஷவ் மஹராஜ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அறிமுக வீரர் க்வேனா மஃபாக்கா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 425 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த பாகிஸ்தானை பலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுமாறு தென் ஆபிரிக்கா பணித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஸான் மசூத், முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 205 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பாபர் அஸாம் இப் போட்டியில் 2ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஷான் மசூத் 102 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 615 (ரெயான் ரிக்ல்டன் 259, டெம்பா பவுமா 106, கய்ல் வெரிசன் 100, மார்க்கோ ஜென்சன் 62, கேஷவ் மஹராஜ் 40, மொஹம்மத் அபாஸ் 94 - 3 விக்., சல்மான் அகா 148 - 3 விக்.)
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 194 (பாபர் அஸாம் 58, மொஹம்மத் ரிஸ்வான் 46, கெகிசோ ரபாடா 55 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 14 - 2 விக்., க்வேனா மஃபாக்கா 43 - 2 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: ஃபலோ ஆன் 213 - 1 விக். (ஷா மசூத் 102 ஆ.இ., பாபர் அஸாம் 81, குரம் ஷாஸாத் 8 ஆ.இ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM