இந்த வருடத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிப்பதே எமது திட்டம் - அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிப்பு

Published By: Vishnu

05 Jan, 2025 | 09:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சுற்றுலாத்துறை என்பது வெறுமனே கைத்தொழில் மாத்திரமல்ல. அது எமது நாட்டின் கலை, கலாசாரத்தை உலகுக்கு கொண்டுசெல்லும் மத்திய நிலையமாகும். அதனால் சுற்றுலா துறையை கிராமிய மக்களுடனும் தொடர்புபடுத்துவதே எமது திட்டமாகும். அதேநேரம் இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு கொண்டுவருவதே எமது இலக்காகும் என வெளிவிவகார, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பெந்தொட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத நிலையம் ஒன்றை சனிக்கிழமை (4)  ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின சுற்றுலாத்துறை வேகமாக முன்னேறிச் செல்கிறது. கடந்த டிசம்பர் 31ஆம் திகதி, இந்த வருடத்தின் சுற்றுலா பயணிகளின் வருகை இலக்கான 2மில்லியனை பூரணப்படுத்தியுள்ளோம். அதனால் இந்த வருடம் அந்த எண்ணிக்கையை 3மில்லியன் வரை அதிகரித்துக்கொள்னவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதன்போது சுற்றுலா பயணிகளின் வருகை அளவை அதிகரி்ப்பது போன்று சுற்றுலா பகுதிகளின் முன்னேற்றத்தையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். சு்ற்றுலா துறைகளின் தரத்தை அதிகரித்துக்கொள்வதன் மூலமே உலகில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்துக்கொள்ள முடியும்.

ஆயுர்வேத மூலிகை, எமது சம்பிரதாய,கலாசார உரிமைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் என அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுபவிக்க கிடைக்கிறது. திறந்துவைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மருத்துவ நிலையமானது சுற்றுலா பயணிகளை மிகவும் கவரமுடியுமான துறையாகும். சுற்றுலாத்துறை என்பது வெறுமனே  கைத்தொழில் மாத்திரமல்ல.

எமது நாட்டின் பிரதிபலிப்பு, எமது நாட்டின் கலாசாரம், எமது நாட்டின் வரலாறு. இந்த மூன்று விடயங்களையும் சுற்றுலா பயணிகளுக்கு குறுகிய காலத்தில் அனுபவிக்க முடியுமாகிறது. அதேபோன்று எமது வரலாற்றை உலகுக்கு கொண்டு செல்லும் மத்திய நிலையமாக சுற்றுலாத்துறை திகழ்கிறது.

ஆயுர்வேத மருத்துவம் எமது நாட்டின் தனித்துவமான மருத்துவ முறையாகும். எமது நாட்டின் தேசிய உரிமையை மேலும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுர் வேதம் உடலியல் சுகாதாரத்துக்கு மாத்திரமல்ல மனோரீதியான ஆராேக்கியத்துக்கும் சிறந்ததாகும். 

மேலும் சுற்றுலாத்துறையை கிராம மக்களுடன் தொடர்புபடுத்தி முன்னேற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அப்போதுதான் கிராமிய மக்களின் வாழ்க்கை முறையை சுற்றுலா பயணிகளுக்கும் அனுபவிக்க முடியுமாகிறது. அதேநேரம் கிராம மக்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் அவர்களிக் வாழ்க்கை தரத்தை முன்னேற்றிக்கொள்ள வழி ஏற்படுகிறது.

அத்துடன் சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவுக்காக மாத்திரமின்றி இங்கு வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இது இந்த காலத்தில் நாங்கள் எதிர்கொண்டுவரும் பாரிய பிரச்சினையாகும். சுற்றுலா விசாவில் வருகின்றன ஒரு சிலரே எமது சுற்றுலா கைத்தொழில் துறைகளில் அந்த இடத்துக்கு உரித்தான வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் எமது சுற்றுலா கைத்தொழிலை உயர் தரத்தில் மேற்கொள்ளவதன் மூலம் அந்த வியாபார நடவடிக்கைகளை தோற்கடிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39