(எம்.மனோசித்ரா)
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பனகல உபதிஸ்ஸ தேரர் ஆற்றிய பணிகள் என்றுமே போற்றத்தக்கவை. அதே போன்று அவரது பணிகள் மேலும் செழிப்படைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பானகல உபதிஸ்ஸ தேரரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1977 தேர்தலுக்கு செல்வதற்கு முன் நானும் அம்மாவுடன் அபேசேகரராம சென்றிருந்த போது பனகல உபதிஸ்ஸ தேரரை சந்திக்க கிடைத்தது. அன்று அவரால் ஆரம்பிக்கப்பட்டிருந்த முன்பள்ளிகள் இன்று நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன .
மஹா போதி சங்கமும் அவருடன் இணைந்து அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது. அவர் ஆற்றிய பணியை நினைவுபடுத்தி அவை மேன்மையடைய வாழ்த்துகிறேன்.
அவர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய பணிகள் பற்றி நாம் அறிவோம். கடந்த வாரம் லும்பினியை பார்வையிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இது குறித்து வெளியுறவு அமைச்சரிடம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளேன். அதன் வளர்ச்சியில் இலங்கையின் பங்களிப்பும் உள்ளது.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆனந்த குடியை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அந்தத் துறவிகள் அனைவரும் இலங்கையில் படித்தவர்களின் உழைப்பில் அதை மீண்டும் கட்டியெழுப்ப இரண்டு மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று இனிவரும் காலங்களிலும் பௌத்தத்துக்கு எமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM