எம்மில் பலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கக்கூடும். பலருக்கு மது அருந்தும் பழக்கமும் இருக்கும். இதன் காரணமாக இவர்களுடைய ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிமங்களாக சேகரமாகி மாரடைப்பு , பக்கவாதம் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை உண்டாக்குகிறது.
எம்முடைய ரத்த நாளங்களில் இயல்பான அளவைவிட கூடுதலாக சேகரமாகும் கொழுப்பு படிவங்களை மருத்துவ மொழியில் ஹைபர்லிபிடெமியா என குறிப்பிடுகிறார்கள். இதனை அகற்றுவதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக எம்முடைய கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து உணவை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் ஹோர்மோன்களையும் உருவாக்குகிறது. ஆனால் எம்மில் பலரும் அதீத கொழுப்பு சத்து அடங்கிய அதிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கொழுப்பு சத்து அடங்கிய ஆட்டு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவு பொருளை பசியாறுகிறார்கள்.
இதனால் உடலில் தேவையான அளவைவிட கூடுதலாக கொழுப்பு சேகரமாகிறது. இவை உடலின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் கொழுப்புகள் என்பதால் இவை ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத்தில் பாதிப்பையும், தடையையும் ஏற்படுத்துகிறது.
இதனால் பலருக்கும் இதய பாதிப்பு ,மாரடைப்பு ,பக்கவாதம் போன்ற விளைவுகள் உண்டாகிறது. உங்களுடைய உடலில் இயல்பான அளவை விட கூடுதலாக கொழுப்புகள் இருந்தால் அதனை உடனடியாக கண்டறிந்து, நீக்குவதற்கான சிகிச்சையை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நெஞ்சு வலி, தாடை பகுதியில் வலி, மூச்சு திணறல், குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பதப்படுத்தப்பட்ட உணவை கூடுதலாகவும் அகால தருணத்திலும் பசியாறுவது, நாளாந்தம் ஆறு மணி தியாலத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது, மன அழுத்தத்துடன் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் உங்களுடைய உடலில் ஹைபர்லிபிடேமியா எனப்படும் அதீத கொழுப்பு பாதிப்பு ஏற்படுகிறது.
வைத்தியர்கள் உங்களை பரிசோதித்து குருதி பரிசோதனை, பிரத்யேக புரத பரிசோதனை, கரோனரி கால்சியம் ஸ்கேன் மற்றும் சில பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து உடலில் சேகரிக்கப்பட்டிருக்கும் கெட்ட கொழுப்புகளையும், இயல்பான அளவை விட கூடுதலாக இருக்கும் கொழுப்புகளையும் குறைப்பதற்கு வாழ்க்கை நடைமுறை , உடற்பயிற்சி, உணவு முறை, பசியாறும் முறை ஆகியவற்றை வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள். இதனுடன் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையையும் வழங்கி நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் சின்னசாமி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM