எம்மில் பலருரிடமும் வாழ்க்கை லட்சியம் என்ன? என்று அவர்களிடம் கேட்டால் 'சிறிய அளவில் சொந்தமாக காணி வேண்டும். அந்த காணியில் எமக்கான சிறிய வீடு ஒன்றை கட்ட வேண்டும் ' இதுதான் அவர்களின் லட்சியம் என்பார்கள்.
சொந்தமாக வீடு என்பது இந்த மண்ணில் நாம் வாழ்ந்தோம் என்பதற்கான நிலவியல் அடையாளம். இதற்காக பலரும் உறங்காமல் உழைத்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் சிலருக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கிறது. பலருக்கு கிடைப்பதில்லை. மேலும் பலரும் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். அங்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் கொடுக்கும் நெருக்கடிகளையும், வாடகை உயர்வினையும் மன அழுத்தத்துடன் எதிர்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் ஒரே இலக்கு சொந்த வீடு. இந்த சொந்த வீட்டு கனவை நனவாக்குவதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பு வழங்கி இருக்கிறார்கள்.
உங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் வலிமையை அருகில் இருக்கும் அனுபவமிக்க ஜோதிட நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலிமையாக இருந்தும் உங்களுக்கு சொந்தமாக காணி இல்லை என்றால் உடனடியாக செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரை எனும் குறிப்பிடப்படும் தருணங்களான காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை, இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை, இதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து , உங்களுடைய பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானுக்கு ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து மனதார சொந்தமாக காணி வாங்கி அதில் வீடு கட்ட வேண்டும் எனும் கோரிக்கையை சமர்ப்பணம் செய்யுங்கள்.
அதனைத் தொடர்ந்து இதற்காக பிரத்யேக நோட்புக் ஒன்றினை அல்லது கையேட்டினை ஒன்றை வாங்கி, அதில் அந்த குறிப்பிட்ட ஒரு மணி தியாலத்திற்குள் சிவப்பு வண்ண பேனாவால் 'ஓம் அங்காரக பகவானே நமஹ' எனும் மந்திரத்தை எழுதி வாருங்கள். எத்தனை முறை மந்திரம் என்ற எண்ணிக்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மணி நேரம் முழுவதும் நின்று நிதானித்து பொறுமையாகவும் நேர்த்தியாகவும் இந்த மந்திரத்தை மனதில் தியானித்து எழுதவும். இந்த மந்திரம் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கான சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வலிமை பெற்றது. இதனை நீங்கள் அனுபவத்தில் உணரலாம்.
உங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலிமை குறைந்திருந்தாலும் இந்த வழிமுறையை தொடர்ந்து கடைபிடிக்கும் போது செவ்வாய் பகவானின் பரிபூரணமான அருள் கிடைக்கும். சொந்த வீட்டு கனவும் நனவாகும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM