அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக பாப்பரசர் பிரான்சிசை இன்று வத்திகானில் சந்தித்தார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 

அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்திருந்த அவர், அங்கு வத்திகான் சென்று பாப்பரசரை இன்று சந்தித்தார். 

தேர்தல் பிரசாரத்தின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.