தெற்கில் பாதாள உலகக் கும்பல்களைச் சேர்ந்தவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.டீ.டி.குணவர்தன தலைமையில் விஷேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. 

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முறியடிப்பதில் தேர்ச்சி மிக்க 7 சிறப்பு அதிகாரிகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

மேலும், தெற்கின் அம்பலாங்கொடை, மீட்டியாகொட, ஹிக்கடுவ, அங்குனுகொலபெலஸ்ஸ உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 6 வரையிலான மனிதப் படுகொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)