(நா.தனுஜா)
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று வருகிறபோது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு உள்ளடங்கலாக மேலும் பல முன்மொழிவுகள் மற்றும் வரைவுகள் இருக்கின்றன.
எனவே தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து அவையனைத்தையும் ஆராய்ந்து, அவற்றில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கி, எமது அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து விலகாமல், தற்கால சூழலுக்கு ஏற்றவாறான புதிய முன்மொழிவொன்றை ஒருமித்துத் தயாரிக்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கத்துக்கு அக்கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் சி.இரத்தினவடிவேல் வெள்ளிக்கிழமை (03) கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.
அக்கடிதத்தில், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் அவரை முன்னிலைப்படுத்துவதையும், தமிழரசுக்கட்சியைப் பலவீனப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட உபாயம் மாத்திரமே எனவும், ஆகவே இவ்விடயம் தொடர்பில் அவருடன் சிறிதரன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தமிழர் நலனுக்கோ, கட்சிக்கோ உகந்ததல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் செயலாளர் சத்தியலிங்கத்திடம் வினவியபோது,தமிழர் பிரச்சினை என்று வருகிறபோது அது பொதுவானதொரு விடயமாகும். எனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து சகல தமிழ்த்தரப்புக்களும் ஒன்றிணைந்து தான் செயற்படவேண்டும். அதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என விளக்கமளித்தார்.
அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒருமித்து செயற்படுவதை இலக்காகக்கொண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சியை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அதுகுறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் ஒன்றிணைந்து தீர்மானிக்கமுடியாது. எனவே இவ்விடயத்தில் எட்டப்படும் இணக்கப்பாடு என்பது தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலானதாகவன்றி, தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடாக இருக்கவேண்டும். இங்கு தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக தமிழர் நலன்களைப் பகடைக்காயாக்க முடியாது,எனவும் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அத்தோடு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று வருகிறபோது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு உள்ளடங்கலாக மேலும் பல முன்மொழிவுகள் மற்றும் வரைவுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், எனவே அவையனைத்தையும் ஆராய்ந்து, அவற்றில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கி, எமது அடிப்படைக்கோட்பாட்டில் இருந்து விலகாமல், தற்கால சூழலுக்கு ஏற்றவாறான புதிய முன்மொழிவொன்றை ஒருமித்துத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளிக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM