தமிழகத்தில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை : 6 தொழிலாளர்கள் பலி! 

04 Jan, 2025 | 04:52 PM
image

தமிழகத்தின் பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, கோட்டூர் - அருப்புக்கோட்டை வீதியில் உள்ள பொம்மையாபுரத்தில், சிவகாசியைச் சேர்ந்த நபருக்கு சொந்தமான பட்டாசு ஆலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

வழமைபோன்று இந்த ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 50 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், இன்று (04) காலை 9.30 மணியளவில், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள் கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 

அவ்வேளை திடீர் உராய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்து காரணமாக பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமாகின.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32