ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதியா ? ; துமிந்த திஸாநாயக்க சந்தேகம்  

04 Jan, 2025 | 05:23 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முற்போக்கு சிந்தனையுடன் 'கிளீன் ஸ்ரீலங்கா'  வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், தேசிய மக்கள் சக்திக்கு அதற்கு எதிராக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

சுகாதாரத்துறைக்கு தனியாரின் ஒத்துழைப்பு தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடா அல்லது தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடா அல்லது நலிந்த ஜயதிஸ்ஸவின் தனிப்பட்ட நிலைப்பாடா என்பது தெரியாது? ஆனால் அவரால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த கருத்து மிகப் பாரதூரமானதாகும். 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று மாத்திரம் தரையில் இறங்கி வேலை செய்வதற்கும், இந்த வேலைத்திட்டம் நிறைவு பெறும் வரை தரையிலேயே வேலை செய்வதற்கும் இடையில் வேறுபாடு உண்டு.

எனவே நாம் இது தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இத்திட்டம் நிறைவடையும் வரை எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களால் இந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரியதாகும். 

'கிளீன் ஸ்ரீலங்கா' என்ற தொனிப்பொருள் சிறந்ததாகும். ஆனால் இதன் உள்நோக்கம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இந்த வேலைத்திட்டத்தை முதலில் தேசிய மக்கள் சக்திக்குள்ளிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றார். 

சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17