மொனராகலை,புத்தல பிரதேசத்தில் முகமூடி அணிந்திருந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை வழிமறித்து அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று, புத்தல பிரதேசத்தில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்திருந்த இருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.
இதன்போது இந்த பெண் மோட்டார் சைக்கிளுடன் கீழே வீழ்ந்துள்ளார்.
பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் குறித்த பெண்ணை அச்சுறுத்தி அவரது கழுத்திலிருந்த தங்க மாலை, தோடுகள் மற்றும் பணப் பையிலிருந்த 15 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM