சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததில் யாத்திரிகர்கள் 21 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் உத்தரகண்ட் மானிலத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 28 பேர் இமாலயாவில் கங்கோத்ரி எனும் புனிதத் தலத்துக்கு யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, தாராசு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. 

இந்த விபத்தில் மேலும் எழுவர் படுகாயங்களுக்குள்ளாகினர்.

பலியான 21 பேரின் குடும்பங்களுக்கும் தலா இரண்டு இலட்ச ரூபாய் நட்ட ஈடாக வழங்கப்படும் என மத்திய பிரதேச மானில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.