வெலிகம - தப்பரதோட்ட - வள்ளிவெல வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் வலான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் 29 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் கப்பரதொட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் மீதே இன்று (4) அதிகாலை குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிர்த்தப்பியதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM