அரசாங்கத்தின் புதிய வரிமுறைமை நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

Published By: Vishnu

04 Jan, 2025 | 04:09 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் புதிய வரி முறைமை மக்கள் மீது பாரிய சுமையை சமத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளதுடன் அது நாட்டின் பொருளாதாரத்துக்கும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி முறைமையின் மூலம் மக்கள் மீது பாரியதொரு சுமையை சுமத்தி இருக்கிறது. புதிய வரி முறையின் பெரும்பாலான விடயங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிரேரிக்கப்பட்ட முறைமைகளுக்கு நிகரானதாகும். இது இந்த அரசாங்கத்தின் அசல் வடிவமைப்பு

அல்ல. தொழில் வல்லுனர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் புதிய வரி மூலம் அவர்கள் மீது பாரிய சுமை சுமத்தப்பட்டுள்ளது. அது நாட்டின் பொருளாதாரத்துக்கும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

புதிய வரிமுறைமை சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தின் பிரகாரம் செயற்படுத்துவதுடன் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைவிட சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கும். என்றாலும் தேர்தலுக்கு முன்பு அரசாங்கத்தின் பொருளாதார ஆலாேசகர்கள் என தெரிவிப்பவர்கள் ஜனாதிபதி, பிரதமர் என இவர்கள் அனைவரும் தெரிவித்த விடயம்தான், நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையில் அதன் நிபந்தனைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுப்போம் தெரிவித்திருந்தார்கள். 

ஆனால் ரணில் விக்ரமசிங்க நாணய நிதியத்துடன் இணங்கிய நிபந்தனைகளையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவருகிறது. ஆனால் அவர்கள் தேர்தல் காலத்தில் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் எதுவும் வாய் திறப்பதில்லை.

2025ஆம் ஆண்டில் அரசாங்கம் 4300 முதல் 4400 பில்லியன் ரூபா வரையான வருமான இலக்கை நெருங்க வேண்டி இருக்கிறது. 2020 கோட்டாபய ராஜபக்ஷ்வின் அரசாங்கத்துடன் இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது, எமது வரி வருமானம் 1300 பில்லியனாக இருந்தது. அப்படியானால் இந்த வருடத்தில் 300 பில்லியன்

மேலதிகமாக தேடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நபரிடமிருந்தும் சுமார் 136000 ரூபா வரியாக அறவிட வேண்டும். இந்த இலக்கை அடைந்துகொள்ளவே தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளுக்கமைய இலங்கை அரசாங்கத்துக்கு 657 பில்லியன் ரூபாவை மூலதன இருப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த இலக்கை அடைந்துகொள்வதற்காக அரசாங்கம் புதிய வரிகளை ஏற்படுத்தி இருப்பதுடன் தற்போதுள்ள வரிகளையும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலை நாட்டு மக்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வங்கிகளில் வைப்புகளுக்கு அறவிடப்படும் நிறுத்திவைப்பு வரி 5வீதத்தில் இருந்து 10 வீதம் வரை அதிகரிப்பது வங்கி வைப்பாளர்களுக்கு பாரிய சவாலாகும். பெருபாலானவர்கள் தங்களின் வைப்புகளை மீள பெற்றுக்கொண்டு வேறு முதலீடுகளுக்கு செலுத்துவதனால் பங்குச்சந்தையில் பாரிய முன்னேற்றத்தை காணமுடிகிறது. இந்த தீர்மானம வங்கி கட்டமைப்புக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகும்.

அத்துடன் அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வரி பிரதான காரணமாகும். குறிப்பாக பெற்றோல் மற்றும் டீசல் மீது பாரியளவில் வரி அறவிடப்படுகிறது. 118 ரூபாவுக்கு கொண்டுவரப்படும் பெற்றோலுக்கு 109 ரூபா வரி இருக்கிறது.

 இதற்கு மேலதிகமாக  மேலும் பல செலவுகள் இருக்கின்றன. பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட  எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்கள் நூற்றுக்கு 14வீத இலாத்துடன் விநியோகிக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41