(செ.சுபதர்ஷனி)
சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றுக் குறித்து சுகாதாரத் துறை கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி புதிய வகை வைரஸ் தொற்று பரவல் குறித்து வெள்ளிக்கிழமை (3) சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்திருந்த விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி வைரஸ் தொற்றுக் குறித்து தற்போது சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பில் உரிய பகுப்பாய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட தயாராக உள்ளோம். ஆகையால் பொதுமக்கள் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதன் பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீனாவின் பல பகுதிகளில் புதிய வகை வைரஸ் இனம் பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது. ”மனித மெட்டாப்நியூமோ வைரஸ்” (எச் எம் பி வி) என குறித்த வைரஸ் தொற்று சீன ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி வைரஸ் தொற்றுடன் மேலும் பல வைரஸ் தொற்றுக்களும் அப்பகுதிகளில் பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன் அவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே சீனாவில் பரவி வந்த கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு முழு உலக நாடுகளும் முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகியிருந்தது.
தற்போது சீனாவில் பரவி வரும் எச் எம் பி வி வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில், ஏற்கனவே கோவிட்-19 தொற்றுக்கு ஆளான நபர்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இந்நாட்களில் இன்புளுவென்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்- 19 தொற்றாளர்களும் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெகுவாக பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எவ்வாறெனினும் அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM