(நெவில் அன்தனி)
கேப் டவுன், நியூலண்டஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (3) ஆரம்பமான பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா பலம்வாய்ந்த நிலையை அடைந்துள்ளது.
ரெயான் ரிக்ல்டன், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் குவித்த சதங்களின் உதவியுடன் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 316 ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையில் இருக்கிறது.
எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ஏய்டன் மார்க்ராம் (17), வியான் முல்டர் (5), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (0) ஆகிய மூவரும் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (72 - 3 விக்)
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரெயான் ரிக்ல்டன், டெம்பா பவுமா ஆகிய இருவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 235 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை பலமான நிலையில் இட்டனர்.
டெம்பா பவுமா தனது 4ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்த சிறிது நேரத்தில் 106 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரிக்ல்டன் 232 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 176 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இது அவர் குவித்த இரண்டாவது டெஸ்ட் சதமாகும்.
அவருடன் டேவிட் பெடிங்ஹாம் ஆட்டம் இழக்காமல் 4 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் சல்மான் அகா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM