நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

Published By: Digital Desk 7

03 Jan, 2025 | 04:55 PM
image

எம்மில் பலரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனையாளராக திகழ வேண்டும் என விரும்புவோம். மேலும் சிலர் வாழ்க்கையில் தோல்வி நிலையிலிருந்து மீண்டு வெற்றி பெற்று அதாவது வெற்றியாளராக உருமாற்றம் பெற்றால் போதும் என நினைப்பார்கள்.

சிலர் எந்த கோணத்தில் முயற்சித்தாலும் வெற்றி என்பது குறைந்தபட்ச அளவில் கூட கிடைக்காமல் தொடர்ந்து தோல்வியே கிடைக்கிறது என வருத்தத்துடன் இருப்பார்கள். வேறு சிலர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் வெற்றி பெற்ற சாதனையாளர்களை அவர்கள் பின்பற்றிய வழியை பின்பற்ற தொடங்குவார்கள். அதில் சிலருக்கு வெற்றியும், பலருக்கு தோல்வியும் கிடைக்கும்.

இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் குறிப்பாக பொருளாதார ரீதியில் பாரிய வெற்றியை எட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பை கடைப்பிடிக்குமாறு சுட்டிக்காட்டுகிறார்கள்.

உடலில் தங்க ஆபரணங்கள் இல்லை என்றால் மற்றவர்களின் கண் திருஷ்டி அதாவது பொறாமை கொண்ட பார்வை பட்டு கண் திருஷ்டி உண்டாகும். இவை பெரும்பாலும் எம்முடைய கண்களுக்கு புலப்படாது. சூட்சமமாக எம்மை ஆக்கிரமித்திருக்கும்.

இதனுடைய ஆதிக்கத்தின் காரணமாக நாம் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்காமல் தாமதமும், தோல்வியும் தொடர்ச்சியாக கிடைத்து வரும். இந்தத் தருணத்தில் எமக்கு தன்னம்பிக்கை- துணிச்சல் இவை இரண்டும் அதீதமாக வேண்டும் என விரும்புவோம். இதனை அள்ளி அள்ளித் தருவது யானையின் முடி.‌

இதனை நேரடியாக வைத்திருக்காமல் யானை முடியுடன் கூடிய தங்க நகை ஆபரணங்களை தயாரித்து அவை மோதிரமாக உருவாக்கி, அணிய வேண்டும். அதே தருணத்தில் யானை முடி மோதிரத்தை வழக்கமான மோதிர விரலில் அணியக்கூடாது.

அதையும் மீறி அணிந்தால் எந்த நற்பலனும் கிடைக்காது. யானை முடியுடன் கூடிய தங்க நகை மோதிரத்தை வலது கையில் உள்ள ஆட்காட்டி விரலில் தான் அணிய வேண்டும். இவை ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் இதனை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

அப்போதுதான் உங்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் ஏற்பட்டு, நெருக்கடியான காலகட்டத்தில் தீர்க்கதரிசியான முடிவுகளை எடுத்து வெற்றியை பெறுவதுடன் சாதனையையும் படைப்பீர்கள்.

அதே தருணத்தில் எம்மில் சிலர் ஜோதிட விளக்கங்களை இணையதளங்களில் அதிகமாக வாசித்து ஓரளவு தங்களுடைய வாழ்க்கை முறையை அவதானிக்கிறார்கள் ஒரு வினாவை எழுப்பக் கூடும்.

அதாவது ரிஷப ராசி-  மகர ராசி - கும்ப ராசி - ஆகிய மூன்று ராசியினரும் தங்க நகையை அணிய கூடாது என ஜோதிட நிபுணர்களும், ஆன்மீகம் முன்னோர்களும் குறிப்பிடுகிறார்களே எங்களுக்கு மாற்று என்ன?  என கேட்க கூடும்.

நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்தில் குருவின் வலிமையை துல்லியமாக அவதானித்து, யானை முடியுடன் கூடிய தங்க நகையை அணியலாமா? அல்லது யானை முடியுடன் கூடிய வெள்ளி நகையை அணியலாமா? என்பதையும், அதனை எந்த விரலில் அணியலாம் என்பதையும் கேட்டு அறிந்து கொண்டு அதனை பின்பற்றினால் வெற்றியும் சாதனையும் உறுதி.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14