ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

03 Jan, 2025 | 04:39 PM
image

பருவநிலை மாற்றங்கள் தற்போதுள்ள சூழலில் தீவிர தன்மையை எதிரொலிக்கிறது. அதாவது கோடை காலம் என்றால் அதிக வெப்பமும் மழைக்காலம் என்றால் அதீத மழையும் பனிக்காலம் என்றால் இயல்பான அளவை விட அதிக குளிரும் ஏற்படுகிறது.

இதன் காரணமாக எம்முடைய உடல் ஆரோக்கியத்திலும் பாரிய பக்க விளைவுகள் உண்டாகிறது. குறிப்பாக எம்மில் சிலருக்கு சுகவீனம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அருகில் இருக்கும் வைத்தியர்களிடம் சென்று ஆலோசனையும், சிகிச்சையையும் பெற்றிருப்பார்கள்.

இதில் சிலருக்கு இரண்டு வாரம் கழித்தோ அல்லது நான்கு வாரம் கழித்தோ மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் வீக்கம் போன்ற பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பை தான் மருத்துவ மொழியில் ரியாக்டிவ் ஒர்தரைடிஸ் என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு உரிய தருணத்தில் முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை மேற்கொண்டால் நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தற்போது பனி காலம் என்பதால் பலருக்கு அவர்களுடைய மூட்டுகளின் இயக்கம் என்பது இயல்பானதாக இருக்காது. குறிப்பாக காலையில் எழுந்தவுடன் பலருக்கு கைகளையும், கை விரல்களையும் இயல்பாக மடக்க முடியாது. இதில் விறைப்பு தன்மை அதிகமாக இருக்கும். 

சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்று காரணமாக சிறுநீரக பாதை பாதிப்பு ஏற்பட்டு இருப்பவர்களுக்கு சிகிச்சை பெற்ற பின்பு இரண்டு வாரம் கழித்து கை விரல்கள், முழங்கால், முழங்கை போன்றவற்றில் உள்ள மூட்டுகளில் வீக்கமும், வலியும் ஏற்படும். பொதுவாக எம்முடைய உடலில் உள் பகுதியில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று பாதிப்பின் பக்க விளைவாகவே இத்தகைய மூட்டுகள் பாதிக்கப்படுகிறது

பெரும்பாலும் இத்தகைய பாதிப்பு முழங்கால், கணுக்கால், கால்கள் தான் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு கண்கள், தோல், சிறுநீர் பாதை போன்ற உறுப்புகளில் வலியும், வீக்கமும் ஏற்படும். வலி, வீக்கம், விரைப்புத்தன்மை, கண் பகுதியில் வீக்கம், சிறுநீர் வெளியேறுவதில் தடை, கால் கட்டை விரல்கள் வீக்கம், தோல் பிரச்சனை, கீழ் பக்க முதுகு வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய உடலில் பாக்டீரியா தொற்று பாதிப்புகள் முழுமையாக நீங்கவில்லை என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த தருணத்தில் வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் குருதி பரிசோதனை- சிறுநீர் பரிசோதனை- மூட்டுகளில் உள்ள திரவங்களின் பிரத்யேக பரிசோதனை - எக்ஸ்ரே பரிசோதனை - போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.

இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்கு ஏற்ப நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். சிலருக்கு மட்டும் மருந்தியல் சிகிச்சையுடன் பிசிக்கல் தெரபி எனப்படும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

வைத்தியர் வேணி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45