சம்பியன் கிண்ண போட்டி தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் பயிற்சி போட்டிகளில் மோதிவருகின்றது.

இதன் முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் மிக அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வெற்றயடைந்துள்ளது.

இந்தபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 166 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய லக்ஷான் சந்தகன் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் மற்றும் உபுல் தரங்க சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, 22.5 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து இலங்கை அணி வெற்றியிலக்கை அடைந்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசால் மெண்டிஸ் 51 பந்துகளில் 74 ஓட்டங்களை குவிக்க மறுமுனையில் தரங்க நிதானமாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.