“பரதநாட்டிய நன்மணி” ஸ்ரீமதி சுகன்யா நித்தியானந்தனிடம் நாட்டியம் பயின்று வரும் “சுந்தரேசர் கலைக்கோயில்” நடனப்பள்ளி மாணவியும் ஞானப்பிரகாசம் நவநீதன் - வேலுசாமி அனுசியா தம்பதியின் புதல்வியுமான நிதீஷா நவநீதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டிய குரு சுகன்யா நித்தியானந்தனின் நெறியாள்கையில் நடைபெறவுள்ள முதலாவது அரங்கேற்ற நிகழ்வாக பத்து வயதேயான நிதீஷா நவநீதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் விளங்குகிறது.
திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் முன்னிலையில் இந்த அரங்கேற்றம் நிகழவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக “தியாகராஜர் கலைக்கோயில்” நடனப்பள்ளியின் இயக்குநரும் நடனக் கலைஞருமான “நாட்டியக் கலைமணி” பவானி குகப்ரியா, கௌரவ விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முருகேசு செந்தில்நாதன், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை அதிபர் ஸ்டெல்லா அன்டன், சிறப்பு விருந்தினர்களாக அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வத்தளை பிரதேச செயலகத்தின் கலாசார அதிகாரி சமில ரூபசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM