வியாபாரிகள் அல்லது தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமையால் பொருளாதார மத்திய நிலையத்தினை ஆரம்பிக்க முடியாமல் உள்ளது - உப்பாலி சமரசிங்க

Published By: Vishnu

03 Jan, 2025 | 02:24 AM
image

வியாபாரிகள் அல்லது தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமையால் பொருளாதார மத்திய நிலையத்தினை ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தெரிவித்தார்.

இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலே பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 

295 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது, சில அரசியல் தலையீடுகள் மற்றும் இனம் சார்ந்த பிரச்சனைகளாலும், வியாபாரிகள் அல்லது தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமை போன்றவற்றினால் அதனை ஆரம்பிப்பதற்கு தற்போது வரை ஒரு இழுபறி நிலை காணப்படுகின்றது. 

மேலும் இது தொடர்பாக பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்ட போதும் அதனை திறக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

எனவே அடுத்த மாத நடுப்பகுதியிலே இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபரும் இணைந்து இது தொடர்பாக கலந்துரையாடுவதுடன், இப்பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை அடுத்த அபிவிருத்தி குழு கூட்டத்தில்  எடுக்கப்படும் என  தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைக்கு சம்மந்தப்பட்ட அனைவரையும் அழைத்து கலந்துரையாடுவதன் மூலமாக இதற்கான தீர்வினை இலகுவாக எடுக்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

மேலும்  விரைவில் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22