நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்று (24) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ். கடற்றொழில் உதவிப்பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.