எம்மில் சிலருக்கு திடீரென்று அவர்கள் அருந்தும் திரவத்தை விழுங்க இயலாமல் தொண்டை பகுதியில் வலி ஏற்படுவதை உணர்ந்திருப்பர். வேறு சிலர் பசியாறும் போது அவர்கள் உணவை விழுங்க இயலாமல் தவிப்பர். இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் அகலாசியா கார்டியா என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது எண்டோஃபிளிப் ( EndoFLIP) எனும் நவீன முறையிலான பரிசோதனை முறை மற்றும் நுண் துளை சத்திர சிகிச்சை முறை மூலம் சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் ஒரு லட்சம் நபர்களில் பத்து நபர்களுக்கு இதுபோன்ற உணவை விழுங்குவதில் சிரமம் அல்லது பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் இது ஒரு அரிய வகையினதான பாதிப்பு என்றும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அகலாசியா என்பது உணவுக் குழாய் எனப்படும் வாய் மற்றும் வயிற்று ஆகிய பகுதிகளை இணைக்கும் குழாயை குறிப்பிடுகிறது. இந்த குழாயில் உள்ள நரம்புகள்- தசைகள் சேதமடைந்தாலோ அல்லது பலவீனமடைந்தாலோ இவை உணவை வயிற்றுக்குள் அழுத்தித் தள்ளுவதை கடினமாக்குகின்றன. இதனால் உணவுக் குழாயில் சேகரிக்கப்பட்ட உணவு மீண்டும் தொண்டைக்குள் வரக்கூடும். பெரும்பாலானவர்கள் இத்தகைய பாதிப்பை இரைப்பை உணவு குழாய் ரிஃப்ளெக்ஸ் நோய் பாதிப்புடன் குழப்பிக் கொள்கிறார்கள். இது உணவுக் குழாயில் ஏற்படும் பாதிப்பாகும். அது இரைப்பையில் ஏற்படும் பாதிப்பாகும்.
திட மற்றும் திரவ பொருள்களை விழுங்குவதில் சிரமம் அல்லது பசியாறிய பொருட்கள் தொண்டைக்குள் சிக்கி இருப்பது போன்ற உணர்வு , நெஞ்செரிச்சல் , ஏப்பம், திடீரென்று தோன்றி மறையும் நெஞ்சு வலி , இரவு நேரத்தில் உறக்கத்தின்போது உண்டாகும் இருமல் , எடை இழப்பு , வாந்தி, நுரையீரலில் ஏற்படும் தொற்று பாதிப்பு ..ஆகிய அறிகுறிகளால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.
உணவுக் குழாயில் உள்ள நரம்பு செல்கள் சேதமடைவதாலும், இறப்பதாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மரபணு குறைபாடு காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் நோயாளிகள் வைத்தியசாலைக்கு வருகை தந்தால் அவர்களுக்கு எக்ஸ்ரே, எண்டோஸ்கோபி ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பினை அவதானிப்பர். சிலருக்கு அகலாசியா கார்டியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள என்டோஃபிளிப் எனும் நவீன பரிசோதனையை பரிந்துரை செய்வார்கள். இந்த பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கலாம்.
இதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை இல்லாமல் இந்த பாதிப்பை நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் வழங்குவர். நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை என்றால்.. பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து உணவு குழாயில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளை நுண் துளை சத்திர சிகிச்சை மூலம் சீரமைப்பார்கள். இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை குறிப்பிட்ட காலம் வரை கடைபிடித்தால் இத்தகைய பாதிப்பில் இருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.
- வைத்தியர் சுதாகர்
தொகுப்பு : அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM