இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபரின் உடலை தோண்டி எடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு 

02 Jan, 2025 | 04:38 PM
image

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கொன்றில்  ஆஜராகவேண்டிய 40 வயது நபரொருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், யாழ். கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை உடற்கூற்று பரிசோதனைக்காக தோண்டியெடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார் - இலுப்பையில் உள்ள வீதி கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். 

அதன் பின்னர், அவர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது இவ்விபத்து தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். 

அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த நிலையில், கிராம சேவகரும் அதற்கிணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டார். 

இந்நிலையில், கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, அவர் சந்தித்த விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அப்போது விபத்தில் சிக்கிய நபர் அங்கு பிரசன்னமாகவில்லை. 

விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன் பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

சடலம் புதைக்கப்பட்ட பகுதி மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்துக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நாளை (03) சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, நாளைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19