அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்கோ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த உதவி தோட்ட முகாமையாளரை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (01) பிற்பகல் கைது செய்ததாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்தார்.
உதவி தோட்ட முகாமையாளர் தனது உத்தியோகபூர்வ தோட்ட பங்களாவில் உள்ள மரக்கறி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாகவும், தற்போது இரண்டு அடி உயரத்துக்கு அச்செடிகள் வளர்ந்துள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட 11 கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (02) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM