ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் வாகனத்தை செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் - நியுஓர்லியன்ஸ் சம்பவம் குறித்து அதிகாரிகள் தகவல்

Published By: Rajeeban

02 Jan, 2025 | 10:55 AM
image

நியு ஓர்லியன்சில் வாகனத்தை கண்மூடித்தனமாக செலுத்தி பொதுமக்கள்மீது மோதிய நபர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை செலுத்தினார் என விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன

இது தொடர்பில் ரொய்ட்டர் செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் அமெரிக்க இராணுவீரரானநபர் ஒருவர் ஐஎஸ்; அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை  மிக வேகமாக செலுத்தி தற்காலிக வீதிதடைகளை கடந்து வந்து புதுவருடத்தன்று பொதுமக்கள் மீது மோதினார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர்  ஏனையவர்களின் உதவியுடனேயே செயற்பட்டிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த 42 வயது சம்சுட் டின் ஜபார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் தனது வாகனத்தினால் பொதுமக்களை தாக்கியதை தொடர்ந்து இவர் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்.

இரண்டு பொலிஸார் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர், பொலிஸார் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்.

இசைநிகழ்வுகள் மதுபானசாலைகளிற்கு பிரபலமான சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் இப்பகுதியில் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவருடன் இணைந்து செயற்பட்டவர்களை கைதுசெய்யப்போவதாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உறுதியளித்துள்ளனர்

வாகனத்தில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் காணப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அந்த பகுதியில்இரண்டு வெடிபொருட்கள் மீட்கப்பட்டு செயல் இழக்கச்செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட வாகனத்திலிருந்து ஐஎஸ் கொடி மீட்கப்பட்டதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கு இந்த வன்முறையுடன் தொடர்புள்ளதா என விசாரணைகள் இடம்பெறுவதாக எவ்பிஐ தெரிவித்துள்ளது.

ஜபார் மாத்திரம் இந்த தாக்குதலிற்கு காரணம் என நாங்கள் நம்பவில்லை, அவரது சகாக்களை தேட முயல்கின்றோம் என தெரிவித்துள்ள எவ்பிஐ அதிகாரியொருவர் பல சந்தேகநபர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03