ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப் பட்டினத்தில், மழைக்கு ஒதுங்கிய இரண்டு இளம் பெண்களை எட்டுப் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

விசாகப் பட்டினத்தின் டஜாங்கி என்ற பகுதியில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அதில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதைக் காண்பதற்காக குறித்த இரண்டு பெண்களும் அவர்களது நண்பர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர்.

திடீரென மழை பெய்ய ஆரம்பித்ததால், அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மழைக்காக அவர்கள் ஒதுங்கினர். இளம் பெண்கள் இருவர் இருளில் நிற்பதைக் கண்ட எட்டுப் பேர் அடங்கிய கும்பலொன்று, நண்பர்களைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு பெண்கள் இருவரையும் தூக்கிச் சென்ற பின் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் பொலிஸில் புகாரளித்தனர். அதில், அப்பகுதி அரசியல்வாதி ஒருவரின் மகனும், பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனும் இன்னும் ஆறு பேரும் சந்தேக நபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தலைமறைவாகியிருக்கும் எட்டுப் பேரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.